 |
யோகி கேமரன் |
பிரிட்டிஷை சேர்ந்த
கேமரன் அல்பொர்ஸியன் என்பவர் முன்னாள் நவநாகரிக மாதிரி கலைஞர் (former fashion model) ஆவார். இவர் 1967-ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் பிறந்தவர். இவருடைய தாயார் இங்கிலாந்தை சேர்ந்தவர்; இவருடைய தந்தையார் ஓர் ஈரானியர்.
கேமரன், கெஸ் (GUESS) , வெர்ஸாச்சி (VERSACE) , லெவிஸ் (LEVI’S) போன்ற உலக பிரபல நவநாகரிக தொழில்துறைக்கு மாதிரி கலைஞராக திகழ்ந்தவர். பேரும் புகழுமிக்க நபராக திகழ்ந்த கேமரன், பல திரளான ரசிகர்கள் கூட்டங்களும் கொண்டிருந்தவர்.
 |
யோகி கேமரன் தன் ஆன்மீக நண்பருடன் (கோவை) |
 |
யோகி கேமரன் நண்பர்களுடன் (கோவை) |
கேமரனின் நெருங்கிய நண்பனின் மறைவு, கேமரனுக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை எடுத்துரைத்தது. கேமரனின் வாழ்க்கையில் எவ்வளவோ பணம், பொருள், புகழ் இருந்தாலும் அவை யாவும் தன்னுடன் இறுதிவரை வரப்போவதில்லை என்ற ஆழமான உண்மையை அவர் அப்போது உணர்ந்தார். ஆதலால், தன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய விரும்பினார். நியூ யோக்கில் அமைந்திருக்கும் யோகா மையங்களில் பங்கேற்றார். யோகா பயிற்சிகளை ஆழமாக கற்க தொடங்கினார். மேலும், சுவாமி சத்சித்தானந்தரின் ஆசிரமங்களுக்கு செல்ல துவங்கினார். அங்கு வேதாந்த கருத்துகளைக் கற்றார். பிறகு பாரத தேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். கோயாம்புத்தூரில் அமைந்திருக்கும் அர்ஷ யோகா வித்ய பீடத்தை நாடி வந்து யோக கலையில் தேர்ச்சி பெற்றார். ஸ்ரீ. வி. வாசுதேவன் எனும் ஆசிரியரிடம் யோக கலையும் ஆயுர்வேத மருத்துவமும் பயின்றார்.
 |
யோகி கேமரனும் அவரின் துணைவியாரும் |
 |
யோகி கேமரனும் அவரின் துணைவியாரும் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் எடுத்த படம் |
 |
யோகி கேமரனின் திருமணம் |
நவநாகரிக நாயகனான கேமரனின் ஆன்மீக ஈடுபாடு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பரவலாக பேசப்பட்டது. இவருடைய இத்தகு பெரிய மாற்றம் அவரின் ரசிகர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபட ஊக்குவித்தது. யோக கலையில் தேர்ச்சி பெற்ற கேமரன், தன்னுடைய இயற்பெயருக்கு முன்னால் ‘யோகி’ என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டு, சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டார். நவநாகரிக துறையிலிருந்து விலகி தற்போது சமூக சேவகராக, எழுத்தாளராக, தத்துவ ஞானியாக மற்றும் யோகாசன ஆசிரியராக திகழ்கின்றார்.
இவருடைய துணைவியாரும் யோக கலையில் தேர்ச்சி பெற்ற யோகினியாக திகழ்கின்றார். இவர்கள் இருவரும் பாரத தேசத்திற்கு வருகை புரிந்து, சனாதன தர்ம முறைபடி திருமணம் புரிந்து கொண்டனர்.
 |
யோகி கேமரனின் புனித பயணத்தின் போது எடுக்கப்பட்ட படம் |
 |
யோகி கேமரன் |
யோகி கேமரனின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
No comments:
Post a Comment