Followers

Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thursday, 31 March 2016

திருக்குறள் (தவம்)

தவம் (அதிகாரம் 27)


உற்றநோய் தோன்றல் உயிர்க்கும்உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)



தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)



துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்? (263)



ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)



வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயல்ப் படும். (265)



தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. (266)



சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)



தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும். (268)



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)



இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)

Sunday, 31 January 2016

குறள் 106


மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)

குறள் 414



கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றான் துணை. (414)

குறள 629


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)