Followers

Showing posts with label யோகாசனம். Show all posts
Showing posts with label யோகாசனம். Show all posts

Wednesday, 30 March 2016

விருக்ஷாசனம் (மரம் போன்ற ஆசனம்)

விருக்ஷாசனம்
(மரம் போன்ற ஆசனம்)



விருக்‌ஷாசனம்

விருக்‌ஷம் என்றால் மரம் எனப் பொருள்படும். ஆசனம் என்றால் இருக்கை அல்லது பாவனை எனப் பொருள்படும். எனவே விருக்‌ஷாசனம் என்பதை மரம் போன்ற பாவனை எனப் பொருள் கொள்ளலாம். விருக்‌ஷாசனம் மிகவும் பிரபலமான ஒரு யோகாசனம் ஆகும்.

|| செய்முறை ||


  1. ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.
  2. நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.
  3. நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
  4. மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.
  5. மடித்துவைக்கப்பட்ட கால் 90 பாகை (டிகிரி) அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
  6. மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை (குதிகால் மூட்டுக்காலை தள்ளும்படி நிற்பதை தவிர்த்து விடவும். குதிகால் மூட்டுக்கு மேலே பதிந்திருப்பது சாலச் சிறப்பு)
  7. இதேபோன்று 30 முதல் 60 நொடி வரை பயின்றி, பின்னர் கால்களை மாற்றி பயிலவும்.

|| பலன்கள் ||

  • கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.
  • பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.
  • இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.
  • காலின் வடிவத்தில் அழகு கூடும்.
  • இடுப்புப் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.
  • இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.
  • விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.
  • கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.
  • தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Saturday, 26 March 2016

யோகாசன செய்முறையும் பலன்களும்


தனுராசனம்


தண்டாசனம்


ஆஞ்சநேயாசனம்


சக்ராசனம்


பத்மாசனம்


புஜங்காசனம்

Saturday, 20 February 2016

பதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்


பதஞ்சலியின் யோக சூத்திரம் – தமிழாக்கம்



|| அறிமுகம் ||


சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் அருளிய அருமை பெருமை வாய்ந்த அரிய நூல் தான்
”பதஞ்சலி யோக சூத்திரம்”. ஏற்கனவே பல்லாயிர ஆண்டுகாலம் மரபில் இருந்துவந்த யோக கலை மற்றும் யோகசாஸ்திர நூல்களை அடிப்படையாக கொண்டு பதஞ்சலி இந்த நூலை அருளினார். பதஞ்சலியின் யோக சூத்திரம் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் விளக்குகின்றது. இந்த சூத்திரம் நான்கு படலங்களும் 196 சூத்திரங்களும் உடையதாகும். பதஞ்சலி பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் ஆதிசேஷனின் திருபிறப்பாகவும் திகழ்கிறார்.


|| நான்கு படலங்கள் ||


பதஞ்சலியின் யோக சூத்திரம் நான்கு படலங்களாக அமைந்துள்ளது.


  1. சமாதி படலம் – 51 சூத்திரங்கள்
  2. சாதனா படலம் – 55 சூத்திரங்கள்
  3. விபூதி படலம் – 56 சூத்திரங்கள்
  4. கைவல்யா படலம் – 34 சூத்திரங்கள்


|| சிறப்பு ||


பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த யோக முறைகளை முறையாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது தான் பதஞ்சலி யோக சூத்திரத்தின் முக்கிய சிறப்பாகும். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் அருளப்ட்டதாகும். ஈஸ்வரனின் திருவருளால் பதஞ்சலி இந்த அரிய நூலை அளித்துள்ளார். இந்துதர்மத்தின் நான்கு யோகங்களான பக்தி யோகம், கர்ம யோகம், அஷ்டாங்க யோகம் மற்றும் ஞான யோகம் ஆகியவற்றில் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் இந்த நூல் விளக்குவதால் இது கர்மயோக மற்றும் அஷ்டாங்க யோக மரபினருக்கு அடிப்படை நூலாக திகழ்கின்றது. நான்கு யோகங்களில் அஷ்டாங்க யோகம் தனித்த சிறப்புடைய காரணத்தால் ‘ராஜயோகம்’ என்று அறியப்படுகின்றது.