திருவாசகம்
சிவபுராணம் (6)
பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும் (நத்தை, சிப்பி), மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே ! ( விருகம் – மிருகம்); (தாவர சங்கமம் [ஸ்தாவர ஜங்கமம் சராசரம்] – அசையா அசையும் பொருள்கள் இரண்டும் அடங்கிய சராசரம்)
விளக்கம்:
எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப் பொருள்) எனவும் சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். இந்த பதினான்கு வகையா பிறப்புகளைத் தான் ஈரேழு பிறவிகள் என்பர். ஓர் ஆன்மா 84 லட்சத்துக்கும் அதிகமான பிறவிகள் பிறக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் நம் பக்கத்தின் முந்தைய பதிவுகளில் பகிரப்பட்டன. ஆன்மா, தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் (consciousness) சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கின்றது.
இனி உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களில் கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன எனபன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்புகளாகும். உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளைப் பிறந்து உழல்கின்றன என்பதை விளக்க, “பிறந்து இளைத்தேன்” என்றார். இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன.
English Transliteration :
Pullaagip poodayp puzhuvaay maramaagi
Pal virugamaagi paravaiyaay paambaagi
English Transliteration :
Pullaagip poodayp puzhuvaay maramaagi
Pal virugamaagi paravaiyaay paambaagi
Kallaay manidharaay peyaay kanangalaay
Val'asurar aagi munivaraay dhevaraay
Chellaa'a nindra itth thaavara sangamatthull
Val'asurar aagi munivaraay dhevaraay
Chellaa'a nindra itth thaavara sangamatthull
Ellaap pirappum piranthu ilaitthen, Emperumaan!
English Translation:
English Translation:
I have taken many births as grass, smaller vegetation, worms, trees, many types of animals, birds, reptiles, rocks, humans, ghouls, spirits, powerful demons, sages, and divine beings. In this never-ending immovable and movable Universe (Sthavara-Jangama), I am tired of taking all the births, My Lord (Em Perumaan)
English word-to-word meaning:
Pullaagi = (as) grass, monocotyledon plant
Pullaagi = (as) grass, monocotyledon plant
Poodaay = (as) smaller vegetation like garlic
Puzhuvaay = (as) worms
Maramaagi = (as) trees
Maramaagi = (as) trees
Pal virugam aagi = (as) many types of animals
Paravaiyaay = (as) birds
Paambaagi = (as) reptiles, such as serpents
Kallaay = (as) rocks, rock-like animals
Manidharaay = (as) human beings
Peyaay = (as) ghouls
Kanangalaay = (as) spirits, such as Ganas
Val asurar aagi = (as) powerful demons, Asuras
Munivaraay = (as) sages, Muni
Dhevaraay = (as) divine beings, Devas
Chellaa'a nindra = never-stopping
Itth thaavara sangamatthul = in this immovable and movable Universe (aka Sthavara-Jangama)
Itth thaavara sangamatthul = in this immovable and movable Universe (aka Sthavara-Jangama)
Ellaap pirappum = all the births (as the species mentioned above)
Piranthu = of taking birth
Ilaitthen = (I am) tired
Emperumaan = My Lord, "em" means my and Perumaan means "Lord"
Om Namah Shivaaya
No comments:
Post a Comment