பதஞ்சலியின் யோக சூத்திரம் – தமிழாக்கம்
|| அறிமுகம் ||
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் அருளிய அருமை பெருமை வாய்ந்த அரிய நூல் தான் ”பதஞ்சலி யோக சூத்திரம்”. ஏற்கனவே பல்லாயிர ஆண்டுகாலம் மரபில் இருந்துவந்த யோக கலை மற்றும் யோகசாஸ்திர நூல்களை அடிப்படையாக கொண்டு பதஞ்சலி இந்த நூலை அருளினார். பதஞ்சலியின் யோக சூத்திரம் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் விளக்குகின்றது. இந்த சூத்திரம் நான்கு படலங்களும் 196 சூத்திரங்களும் உடையதாகும். பதஞ்சலி பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் ஆதிசேஷனின் திருபிறப்பாகவும் திகழ்கிறார்.
|| நான்கு படலங்கள் ||
பதஞ்சலியின் யோக சூத்திரம் நான்கு படலங்களாக அமைந்துள்ளது.
- சமாதி படலம் – 51 சூத்திரங்கள்
- சாதனா படலம் – 55 சூத்திரங்கள்
- விபூதி படலம் – 56 சூத்திரங்கள்
- கைவல்யா படலம் – 34 சூத்திரங்கள்
|| சிறப்பு ||
பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த யோக முறைகளை முறையாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது தான் பதஞ்சலி யோக சூத்திரத்தின் முக்கிய சிறப்பாகும். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலக மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் அருளப்ட்டதாகும். ஈஸ்வரனின் திருவருளால் பதஞ்சலி இந்த அரிய நூலை அளித்துள்ளார். இந்துதர்மத்தின் நான்கு யோகங்களான பக்தி யோகம், கர்ம யோகம், அஷ்டாங்க யோகம் மற்றும் ஞான யோகம் ஆகியவற்றில் கர்ம யோகம் மற்றும் அஷ்டாங்க யோகம் ஆகிய இரண்டைப் பற்றியும் இந்த நூல் விளக்குவதால் இது கர்மயோக மற்றும் அஷ்டாங்க யோக மரபினருக்கு அடிப்படை நூலாக திகழ்கின்றது. நான்கு யோகங்களில் அஷ்டாங்க யோகம் தனித்த சிறப்புடைய காரணத்தால் ‘ராஜயோகம்’ என்று அறியப்படுகின்றது.
No comments:
Post a Comment