Followers
Wednesday, 10 February 2016
அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா
சுஷ்ருதா என்பவர் 2600 ஆண்டுகளுக்கு முந்தையவர். இவரின் அரிய படைப்பு ‘சுஷ்ருதா சம்ஹிதம்’ என அறியபடுகின்றது. இப்படைப்பு அறுவை சிகிச்சையைப் பற்றிய மிக துல்லியமான படைப்பாகும். இதனாலே சுஷ்ருதா ‘அறுவை சிகிச்சையின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
ஆயுர்வேதாவைச் சேர்ந்த மிகமுக்கிய மூன்று நூல்களில் ஒன்றுதான் சுஷ்ருதா சம்ஹிதம். 184 அத்தியாயங்களைக் கொண்ட இந்த சம்ஹிதத்தில் 1120 வகையான நோய்களும், 700 மூலிகைகளும்,64 வகையான கனிமங்களும், 57 வகையான விலங்கியல் மருந்துகளும் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்ஹிதத்தில் சுஷ்ருதா ஆழமான, நுணுக்கமான அறுவை சிகிச்சைகளைப் பற்றி மிக தெளிவாக விளக்குகியுள்ளார். சொத்தைப்பல் நீக்கம், மூலம் சிகிச்சை, குடல்சார்ந்த சிகிச்சைகள், பாலின உறுப்பு சார்ந்த சிகிச்சைகள், எலும்பு முறிவு சிகிச்சைகள் போன்ற பலவகையான சிகிச்சைகளும் குறிக்கப்பட்டுள்ளன. மனித எலும்புகளின் வகைகளும் அதன் விளக்கங்களும் கூட குறிக்கப்பட்டுள்ளன. மேலும், கண் சார்ந்த கோளாறுகள் பற்றியும் அதற்கான சிகிச்சைகளும் பற்றிய குறிக்கப்பட்டுள்ளன.
எட்டாம் நூற்றாண்டில் இந்த நூல் “கிதாப் இ சுஷ்ருத்’ என்ற பெயரில் அரபுமொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment