Followers

Sunday, 7 February 2016

அங்கோர்வாட்டில் டைனசார்




அங்கோர் வாட் கம்போடியாவில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப் பெரிய ஆலயமாகும். கம்போடியாவின் இந்து ராஜ்ஜியமான கிமேர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த, இரண்டாம் சூர்யவர்மன் (பரமவிஷ்ணுலோகன்) எனும் அரசர் இந்த ஆலயத்தை கிமேர் ராஜ்ஜியத்தின் தலைநகரான யசோதாபுரத்தில் கட்டினார். அங்கோர்வாட் ஸ்ரீவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டதாகும். தற்போது கம்போடிய தேசியகொடியின் சின்னமாக அங்கோர்வாட் திகழ்கின்றது.



இந்துதர்மத்தின் இயற்பெயர் சனாதன தர்மமாகும். சனாதன தர்மம் என்றால் அழிவற்ற பிரபஞ்சநியதி எனப் பொருள்படும். எப்போதுமே இருந்துகொண்டிருந்த, இருக்கவேண்டிய தர்மங்களை நம்முடைய ரிஷிகளும் முனிவர்களும் தங்களின் தவோபலத்தால், அவற்றை உணர்ந்து உலகிற்குச் சொன்னார்கள். பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்க கூடும் என்று ரிக்வேதம் 10.129 குறிக்கின்றது, இந்த கோட்பாடு இன்றைய நவீன அறிவியல் உலகத்தை வியக்கவைக்கின்றது. அந்தவகையில், பலகோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூமி கிரகத்தில் டைனசார்கள் எனப்படும் இராட்சத பல்லிகள் வாழ்ந்தன என்பதையும் நம்முடைய முன்னோர்கள் உணர்ந்திருக்க கூடும்.


பொதுவாக கோவில் சிற்பங்களில் விநோதமான விலங்குகளின் உருவங்களை நாம் காணலாம். அந்தவகையில், அங்கோர்வாட்டின் சிற்பங்களில் இந்த ’டைனசார்’ எல்லோருடைய கவனத்தையும் அதிகம் ஈர்த்தது. இந்தவகை டைனசார் அறிவியல்ரீதியில் (stegosaurus) என அறியபடுகின்றன. டைனசார்கள் வாழ்ந்தன என்பதையே 1800’ஆ, ஆண்டுகளில் தான் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு முன்பு உலகின் வேறு எந்த நாகரீகமும், சமயமும் டைனசார்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. இப்படி இருக்கையில், 1000ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கோவிலில் டைனசாரின் சிற்பம் இருப்பது வியப்பான ஒரு விஷயம் தான்.

No comments:

Post a Comment