Followers

Saturday, 13 February 2016

குருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்



உதியன் சேரலாதன் எனும் சேர மன்னன், குருஷேத்ர போரில் பாண்டவ-கௌரவ படைகளைச் சேர்ந்த போராளிகளுக்கு உணவு வழங்கியதால் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று புறநானூற்றில் போற்றப்படுகிறார்.

உதியன் சேரலாதன், சோழ மன்னரான கரிகால சோழனைப் போல் புகழ்ப்பெற்றவர் ஆவார்.

”அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறநானூறு பாடல் 2)

பொருள்:
நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்பொருது போர்க்களத்தின் கட்படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்!

இந்த புறநானூற்றுப் பாடல், பண்டைய காலத்திலே தென்பாரதமும் வடபாரதமும் எவ்வளவு ஒற்றுமையாகவும் அன்புடனும் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல், மகாபாரதத்தில் பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் பாண்டவர்களோடு சேர்ந்து கௌரவர்களை எதிர்த்துப் போரிட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் வம்சாவழியினரே பாண்டியர்கள் என்ற கருத்தும் மிகப் பரவலாக நிலவுகின்றது.

No comments:

Post a Comment