Followers

Sunday, 14 February 2016

அதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்



மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும். அவற்றுள் அதிக ஸ்லோகங்களைக் கொண்டதும், மிக நீளமானதும் கந்தபுராணமாகும். முருகப் பெருமானைப் பற்றிய குறிப்புகளும், முருகப்பெருமானின் லீலைகளைப் பற்றியும், இந்துக்களின் புனித தளங்களைப் பற்றிய குறிப்புகளும், பாரத தேசத்தின் பல்வேறு இடங்களைப் பற்றிய தகவல்களும் இந்த புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளும் இந்த புராணத்தில் உள்ளன.

கச்சியப்பர் அவர்கள் கந்தபுராணத்தை தமிழில் வெளியிட்டார். கந்தபுராணத்தில் மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன. அவை மஹேஸ்வர கண்டம், விஷ்ணு கண்டம், பிரம்ம கண்டம், காசி கண்டம், ஆவந்திய கண்டம், நகர கண்டம், பிரபாச கண்டம்.

சமுத்ர மந்தன், தாரகாசுர வதம், மஹிஷாசுர வதம், நவதுர்கைகள், ஜோதிலிங்க தலங்கள், திரிசங்கு-விஷ்வாமித்ரர் கதை, பத்மாவதி கதை போன்றவைகள் கந்தபுராணத்தில் இடம்பெறும் தகவல்களில் முக்கியமானவை ஆகும்.

முருகப்பெருமானுக்கு கந்தன் (ஸ்கந்தன்), கார்த்திகேயன், குமாரஸ்வாமி, சுப்ரமணியர், சேயோன், வேலன், சரவணன், செந்தில், தண்டபாணி, ஷண்முகன், குகன் என்ற பலப் பெயர்கள் உள்ளன. முருகப்பெருமான் தேவர்களின் சேனாதிபதியும், பார்வதிசிவனின் மகனும் ஆவார்.

No comments:

Post a Comment