ஜெர்மனியில் சுமார் 120,000 இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 45,000 தமிழீழ இந்துக்கள் ஆவர். 40,000 இந்திய இந்துக்களும், 10,000 ஆப்கானிஸ்தானிய இந்துக்களும், மீதமுள்ளவர்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ஜெர்மானிய இந்துக்கள் ஆவர்.
[Remid, 2011] ஜெர்மனியில் 50க்கும் அதிகமான இந்து கோவில்கள் அமைந்துள்ளன. ராமாயன் ஹரி கிருஷ்ணா ஆலயம், கற்பக விநாயகர் ஆலயம், ஸ்ரீ பிள்ளையார் கோவில், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலயம், ஹரிஓம் மண்டீர், ஸ்ரீ சிவசக்தி குமரன் ஆலயம், ஸ்ரீதுர்கா ஆலயம், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில், கந்தஸ்வாமி கோவில், குறிஞ்சிகுமரன் கோவில் மற்றும் இதர கோவில்கள் புகழ்ப்பெற்ற கோவில்களாக திகழ்கின்றன.
|
ஜெர்மனி வாழ் இந்துக்கள் |
1950-ஆம் ஆண்டில் ஜெர்மனியின் மக்கள்தொகையில் 98% கிறிஸ்துவர்களாக இருந்தனர், 2011-நிலவரப்படி சுமார் 61.5% கிறிஸ்துவர்கள் ஜெர்மனியில் வாழ்கின்றனர். 38.8% க்கும் அதிகமானோர் மதமற்றவர்களாக உள்ளனர். ஜெர்மனி வாழ் மக்கள் வேதாந்தம், யோகா, பௌத்த மதம் போன்ற இந்திய சமயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
அதிகாரப்பூர்வ வலைத்தளம்kamadchi-ampal.olanko.de/
No comments:
Post a Comment