Followers

Thursday 11 February 2016

ஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்




சிவபெருமானின் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான சோம்நாத் ஆலயம் குஜராத்தில் அமைந்துள்ளது. இதுவே ஜோதிலிங்கங்களில் முதன்மையானது ஆகும். இங்கு சிவபெருமான் சோம்நாதராக எழுந்தருளுகிறார். இங்குதான் ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இது அழிவற்ற ஆலயம் என அறியப்படுகிறது. இதற்கு காரணம் இந்த ஆலயம் கடந்த 1000 ஆண்டுகளில் பல முறை முஸ்லீம்களால் அழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், இந்து மன்னர்கள் இந்த ஆலயத்தை திருப்பி கட்டினர். இந்த ஆலயம் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையானது. ஆயினும், 649-ஆம் ஆண்டு வல்லபி அரசர்கள் இக்கோவிலைப் புதுப்பித்து மேம்படுத்திக் கட்டினர்.

749-ஆம் ஆண்டில் குஜராத்தையும் ராஜஸ்தானையும் படையெடுத்து வந்து தாக்கிய அல்-ஜுனாய்த் சோம்நாத் ஆலயத்தை இடித்து, பலரைக் கொன்று குவித்தான். 815ஆம் ஆண்டில், இரண்டாம் நாகபத்தா சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டினார். 997-ஆம் ஆண்டில் சாலுக்ய அரசர் முலாராஜா மேம்படுத்தினார்.

1024-ஆம் ஆண்டில், மஹ்முட் கஸ்னி என்பவனால் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. முதலாம் பீம்தேவா எனப்படும் அரசர் இக்கோவிலை 1026 முதல் 1042 ஆண்டுக்குள் மீண்டும் கட்டினார்.

மீண்டும் ஒருமுறை இஸ்லாமிய படையெடுப்பில் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. குமாரப்பல் எனப்படும் அரசர் மீண்டும் இக்கோவிலை 1172ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.

1296-இல் அலாவுதின் கில்ஜியின் படையெடுப்பில் இந்த ஆலயம் இடிக்கப்பட்டது. அப்போது ”மதமாற மறுத்த 50,000 இந்துக்களை வெட்டிக் கொன்றேன், மேலும் 20,000 பேரையும் எண்ணற்ற ஆடுமாடுகளையும் அடிமைகளாக்கினேன்” என்று அலாவுதின் கில்ஜி மார்தட்டிக் கொண்டான் என தஜ்-உல்-மாஸிர் எனும் அவனுடைய வரலாற்றுச் சுவடு குறிக்கின்றது. மஹிபலா தேவ எனப்படும் அரசரால் 1308ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

1375-ஆம் ஆண்டு, முசபர் ஷா எனப்படுபவனால் இந்த ஆலயம் தாக்கப்பட்டு, இடிக்கப்பட்டது. எனினும், இந்துக்கள் மீண்டும் இக்கோவிலைக் கட்டினர்.

1451-ஆம் ஆண்டு, மஹ்முத் பெகாடா எனப்படுபவனால் இந்த ஆலயம் மீண்டும் தாக்கப்பட்டது. இவன் இந்த ஆலயத்தின் சந்தனகட்டை கதவுகளையும், விலையுயர்ந்த பல பொருட்களையும் களவாடி சென்றான். எனினும், இந்துக்கள் இக்கோவிலை மீண்டும் கட்டினர்.

மீண்டும் ஒருமுறை, 1665-ஆம் ஆண்டு அவுரங்கசெப் எனப்படும் முஸ்லீம் அராஜகாரனால் அழிக்கப்பட்டது. 1783-ஆம் ஆண்டு இந்த ஆலயம் நாக்பூர் அரசர் மற்றும் இதர அரச அரசிகளின் உதவியோடு மீண்டும் கட்டப்பட்டது. அதோடு முஸ்லீம் அராஜகம் ஓரளவு ஓய்ந்து, பிரிட்டீஷ் அராஜகம் வந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர், சோம்நாத் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இன்று சோம்நாத் ஆலயம், 8.2 மீட்டர் உயர கோபுரத்தில் இந்துதர்ம காவி கொடியுடன் காட்சியளிக்கின்றது. கோவிலின் சிகரம் 15 மீட்டர் உயரமுடையது.

No comments:

Post a Comment