Followers

Friday, 11 March 2016

நெதர்லாந்து விநாயகர் திருக்கோயில்

நெதர்லாந்து விநாயகர் திருக்கோயில்





ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் திருக்கோயில், நெதர்லாந்தின் டென் ஹெல்டர் நகரில் அமைந்துள்ளது. தமிழர்களின் கலைநயமிக்க கட்டடக் கலைத்துவத்தை பறைசாற்றும் வகையில் இந்த எழில்மிகு திருக்கோயில் எழுந்தருளியுள்ளது.





நெதர்லாந்தில் சுமார் 50 இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன என அண்மைய அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அவற்றுள் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம் தனித்த சிறப்புமிக்கதாக விளங்குகின்றது. அதற்கு முக்கிய காரணம் இக்கோயிலின் வியத்தகு அமைப்புமுறை மட்டுமல்ல விநாயகரின் திருவருளும் தான்.





1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அறிக்கையின்படி நெதர்லாந்தில் 3,000 இந்துக்கள் வாழ்ந்தனர். ஆனால் தற்போது நெதர்லாந்தில் ஏறக்குறைய 3 லட்சம் (300,000) இந்துக்கள் வாழ்கின்றனர். இதனால் சில ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் மக்களின் நன்கொடையால் இத்திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.





இந்த ஆலயத்தின் மூலவர் விநாயக பெருமான் ஆவார். மேலும் இக்கோயிலில் மற்ற தெய்வங்களின் சன்னிதிகளும் அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தங்களின் பக்தியை வெளிபடுத்துகின்றனர்.




அண்மையில் இந்த கோயில் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.தெய்வபக்தியுடன் பக்தர்கள் வீதியில் ஊர்வலம் வருகையில், பார்ப்பவர்கள் உள்ளம் பக்திமழையில் நனைந்தது.



No comments:

Post a Comment