இந்துக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிப் பண்புகளை இந்து தர்ம நூல்கள் இயமம் மற்றும் நியமம் என்று குறிப்பிடுகின்றன. நன்னெறி பண்புமிக்க ஒரு மனிதனை உருவாக்கவும், ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்பப்படியாகவும் இவை அமைந்துள்ளன. ரிக்வேதம் முதற்கொண்டு ஐம்பதிற்கும் அதிகமான இந்துதர்ம நூல்கள் இயம-நியமங்களை விளக்குகின்றன. எனவே, இந்துதர்மத்தின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாக இயம-நியமம் விளங்குகின்றது.
- இயமம் – செய்யக்கூடாதவை (தவிர்க்க வேண்டியவைகள்)
- நியமம் – செய்யக்கூடியவை (கடைப்பிடிக்க வேண்டியவைகள்)
இயமம்
பதஞ்சலி யோகசூத்திரம் (2:30) குறிப்பிடும் ஐந்து இயமங்கள்
- அஹிம்சை – கொல்லாமை/இன்னா செய்யாமை
- சத்தியம் – வாய்மை/பொய்யாமை
- அஸ்தேயம் – கள்ளாமை/திருடாமை
- பிரம்மச்சரியம் - அடக்கமுடைமை
- அபரிகிரஹம் – வெஃகாமை/பிறர்பொருளை அபகரிக்காமை
நியமம்
பதஞ்சலி யோகசூத்திரம் (2:32) குறிப்பிடும் ஐந்து நியமங்கள்
- ஷௌச்சம் - தூய்மை
- சந்தோஷம் – மனநிறைவு
- தபஸ் – தவம்
- ஸ்வாத்யாயம் – நூல்கற்றல்
- ஈஷ்வரபிரணிதானம் – ஈஸ்வரனிடம் சரண்புகுதல்
செய்யக் கூடாத ஐந்து
- அப்பாவி உயிர்களை துன்புறுத்தல்/கொல்லுதல்
- பொய் பேசுதல்
- திருடுதல்
- அடக்கமின்றி நடத்தல்
- மற்றவர் பொருளை அபகரித்தல்
செய்ய வேண்டிய ஐந்து
- தூய்மையைப் பேணுதல்
- மனதிருப்தி கொண்டிருத்தல்
- விரதம், தவம் மேற்கொள்தல்
- நல்ல நூல்களைக் கற்றல்
- இறைவனிடம் சரணடைதல்
திருமூலர்
திருமூலர் பத்து இயமங்களையும், பத்து நியமங்களையும் குறிப்பிடுகிறார்.
இயமங்கள் : கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அடக்கமுடைமை, வெஃகாமை, பொறையுடைமை, உறுதியுடைமை, அருளுடைமை, நேர்மை, மிதமான உணவுமுறை.
நியமங்கள் : தவம், நாமஜெபம், மனநிறைவு, இறைநம்பிக்கை, தானம், விரதம், நூல்கற்றல், தியாகம், சிவபூஜை, பேரொளி தரிசனம்.
No comments:
Post a Comment