மூன்று வகை தர்மம்
தர்மச் சக்கரம் |
தர்மம் என்றால் 'பிரபஞ்சத்தின் செயல்பாட்டுடன் இசைந்து முறையாக வாழும் நெறி' எனப் பொருள்படும்.
தர்மநியதிக்கு எதிரானது அதர்மம் எனப்படும். இந்துமதத்தின் உண்மையான பெயர் 'சனாதன தர்மம்' ஆகும். 'எப்போதும் நிலைத்திருக்கும் அறநெறி' என்பதே இதன் பொருளாகும்.
இந்த அறநெறி இந்தியா (இந்துஸ்தான்)-இல் உணரப்பட்டதால் இதற்கு 'இந்துதர்மம்' என்ற பெயர் அண்மைய நூற்றாண்டில் வழங்கப்பட்டது.
"தர்மத்தை விட மேன்மையானது எதுவுமில்லை. தர்மமே இந்த அண்டம் முழுவதையும் தாங்குகின்றது. தர்மமே சத்தியம்."-யஜுர்வேத பிருகதாரண்யக உபநிடதம் 1:4:14-
மூவகை தர்மம்
வாத்ஸயாயனர் தனது நியாயசூத்திர பாஷ்யத்தில் மூன்றுவகை தர்மங்களைக் குறிப்பிடுகிறார்.
1) உடல் தர்மம் (உடலால் ஆற்றவேண்டிய அறம்)
அ) தானம் - தேவைபடுவோருக்கு தானம் தருதல்
ஆ) துயர்துடைப்பு - துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கண்ணீரை துடைத்தல்
இ) சேவை - சக மக்களுக்கும் உலக உயிர்களுக்கும் சேவை செய்தல்
2) மன தர்மம் (மனத்தால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)
அ) கருணை - உயிர்களிடம் கருணை கொள்தல்
ஆ) திருப்தி - தன்னிடம் இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்தல்
இ) இறைநம்பிக்கை -
இறைவனைப் பற்றிய நம்பிக்கை மனதில் நிலைத்திருத்தல்
3) வாக்கு தர்மம் (வாய்ச்சொற்களால் கடைப்பிடிக்கவேண்டிய அறம்)
அ) உண்மை - ஒன்றைப்பற்றி தீர விசாரித்து மெய்யென அறிந்தபின் பேசுதல்
ஆ) இனிமை - கசப்பான கடுஞ்சொற்களைத் தவிர்த்துவிட்டு இனிய சொற்களைப் பேசுதல்
இ) பணிவு - எல்லோரிடமும் மரியாதையுடன், பணிவாகப் பேசுதல்
No comments:
Post a Comment