Followers

Friday, 25 March 2016

தமிழ்நாட்டு அரசுச் சின்னம்



இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு, மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருபெற்றன. அந்த காலக்கட்டத்தில் சென்னை மாகாண அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை தெர்ந்தெடுத்தனர்.

’கோயில்களின் மாநிலம்’
என்று சிறப்பாக அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட சிறப்புவாய்ந்த கோயில்கள் அமைந்துள்ளன. உலகத்தின் மிகப்பெரிய பதினைந்து கோயில்களில் பதினொன்று கோயில்கள் தமிழ்நாட்டில் தான் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டின் கலை, கலாச்சார மற்றும் சமய அடையாளமாக திகழும் கோயில்களை பேணிக் காக்க வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும்.

No comments:

Post a Comment