பிருகதாரண்யக உபநிடத ஷாந்தி மந்திரம்
ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமயம்ர்த்யோர் மா அம்ர்தம் கமயஓம் ஷாந்திஹ் ஷாந்திஹ் ஷாந்திஹ்
தமிழில்:
ஓம்
மெய்யற்றவை அல்லாது மெய்யானவற்றை நோக்கிச் செல்ல துணைபுரிக,
இருள் அல்லாது ஒளியை நோக்கிச் செல்ல துணைபுரிக,
இறப்பு அல்லாது இறப்பில்லா தன்மையைப் பெற துணைபுரிக,
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
பொருள்:
ஓம், எங்களை அஸத்யமானவற்றிலிருந்து விலக்கி ஸத்யமானவற்றை நோக்கிச் செல்ல துணைபுரியுங்கள். மெய்யற்ற உலக வாழ்வில் இருந்து விலக்கி, மெய்யான உணர்வாய் விளங்கும் ஆத்மனையும் பரம-தத்துவத்தையும் உணர வழிகாட்டுங்கள். எங்களை இருளில் இருந்து விலக்கி ஒளியை நோக்கிச் செல்ல துணைபுரியுங்கள். அறியாமை எனும் பேரிருளில் இருந்து விலக்கி, அருட்பெருஞ்ஜோதியான ஞானத்தை அடைய துணைபுரியுங்கள். எங்களை மரணத்தில் இருந்து விலக்கி மரணமில்லாத நிலையை தாருங்கள். பிறவிச் சுழற்சிகளில் இருந்து விடுபட செய்து, மோக்ஷம் அடைய வழிக்காட்டுங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி.
சொற்களும் பொருள்களும்:
ஓம் – பரம்பொருள்
அஸதோ (அஸத்) – மெய்யற்ற/உண்மையற்ற; அதாவது உலக வாழ்வின் பிணைப்புகள்
மா – அல்லாது
ஸத் – மெய்/ உண்மை
கமய – நோக்கிச் செல்ல துணைபுரிக
தமஸோ (தமஸ்) – அறியாமை/ பேரிருள்
ஜ்யோதிர் (ஜ்யோதிஸ்) – ஒளி/ ஞான ஒளி
ம்ர்த்யோர் (ம்ர்த்யு) – இறப்பு
அம்ர்தம் – இறப்பற்ற
ஷாந்திஹ் – அமைதி/சாந்தம்
No comments:
Post a Comment