Followers

Tuesday, 30 June 2020

திருவாசகம் - Thiruvasagam (with English Translation)





திருவாசகம்
சிவபுராணம் (6)

பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும் (நத்தை, சிப்பி), மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே ! ( விருகம் – மிருகம்); (தாவர சங்கமம் [ஸ்தாவர ஜங்கமம் சராசரம்] – அசையா அசையும் பொருள்கள் இரண்டும் அடங்கிய சராசரம்)

விளக்கம்:
எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப் பொருள்) எனவும் சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். இந்த பதினான்கு வகையா பிறப்புகளைத் தான் ஈரேழு பிறவிகள் என்பர். ஓர் ஆன்மா 84 லட்சத்துக்கும் அதிகமான பிறவிகள் பிறக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் நம் பக்கத்தின் முந்தைய பதிவுகளில் பகிரப்பட்டன. ஆன்மா, தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் (consciousness) சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கின்றது.

இனி உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களில் கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன எனபன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்புகளாகும். உயிர்கள் இத்தனை வகைப் பிறப்புகளைப் பிறந்து உழல்கின்றன என்பதை விளக்க, “பிறந்து இளைத்தேன்” என்றார். இவற்றால் உயிர்களின் பிறப்பு வகைகள் கூறப்பட்டன.


English Transliteration :

Pullaagip poodayp puzhuvaay maramaagi
Pal virugamaagi paravaiyaay paambaagi
Kallaay manidharaay peyaay kanangalaay
Val'asurar aagi munivaraay dhevaraay
Chellaa'a nindra itth thaavara sangamatthull
Ellaap pirappum piranthu ilaitthen, Emperumaan!

English Translation: 

I have taken many births as grass, smaller vegetation, worms, trees, many types of animals, birds, reptiles, rocks, humans, ghouls, spirits, powerful demons, sages, and divine beings. In this never-ending immovable and movable Universe (Sthavara-Jangama), I am tired of taking all the births, My Lord (Em Perumaan)

English word-to-word meaning:

Pullaagi =
(as) grass, 
monocotyledon plant
Poodaay = (as) smaller vegetation like garlic
Puzhuvaay = (as) worms
Maramaagi = (as) trees
Pal virugam aagi = (as) many types of animals
Paravaiyaay = (as) birds
Paambaagi = (as) reptiles, such as serpents
Kallaay = (as) rocks, rock-like animals
Manidharaay = (as) human beings
Peyaay = (as) ghouls
Kanangalaay = (as) spirits, such as Ganas
Val asurar aagi = (as) powerful demons, Asuras
Munivaraay = (as) sages, Muni
Dhevaraay = (as) divine beings, Devas
Chellaa'a nindra = never-stopping
Itth thaavara sangamatthul = in this immovable and movable Universe (aka Sthavara-Jangama)
Ellaap pirappum = all the births (as the species mentioned above)
Piranthu = of taking birth
Ilaitthen = (I am) tired
Emperumaan = My Lord, "em" means my and Perumaan means "Lord"

Om Namah Shivaaya

சீதை தான் காளி!!

#இராமாயணத்தில் ஹனுமான் இராவணனிடம் சீதை வேறு யாருமில்லை, சீதை தான் மஹா காளி என எச்சரிக்கிறார்.




"நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் சீதை வேறுயாரும் இல்லை. காலராத்திரி எனப்படும் காளி. ஒட்டுமொத்த இலங்கையையும் சொற்பநொடியில் சர்வநாசமாக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர்." (5-51-34)


யாம் சீதா இதி அபிஜானாஸி யா இயம் திஷ்ததி தே வஸே

கால ராத்ரீ இதி தாம் வித்தி ஸர்வ லங்கா வினாஷினீம் (வால்மீகி #இராமாயணம் 5:51:34)


ஒவ்வொரு பெண்ணும் காளியின் தன்மையைக் கொண்டுள்ளனர். பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது மிகப் பெரிய அழிவை உண்டாக்கும்.


இதுவே #தர்மசாஸ்திரத்தில்


"எங்கே பெண்களுக்குத் தக்க மரியாதைகள் தரப்படுகின்றதோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைகின்றன. எங்கே பெண்கள் அவமதிக்கப்படுகின்றனரோ, அங்கே எந்த காரியமும் வெற்றியடையாமல் துன்பத்திலே முடிகின்றன." 

('யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே' எனத் துவங்கும் சுலோகம்)


Monday, 29 June 2020

வேதாந்தம் கூறும் கர்மா (பிருகதாரண்யக உபநிடதம்)







இலங்கையே தீக்கிரை ஆகியும் சீதையைத் தீ தீண்டவில்லை

இலங்கையே தீக்கிரை ஆகியும் சீதையைத் தீ தீண்டவில்லை



தூதுவனாக வந்த ஹனுமானைக் கட்டிப் போட்டு, வாலில் தீ வைத்து, நகரம் முழுவதும் எல்லாத் தெருக்களிலும் அழைத்துச் செல்லுமாறு இராவணன் ஆணையிட்டான். கைகள் கட்டப்பட்ட நிலையில், ஹனுமானின் வாலில் துணிகள் சுற்றப்பட்டு, எண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்பட்டார். அரக்கர்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். மேளங்கள் இசைத்து, சங்கங்கள் முழங்கி ஆரவாரமாக ஹனுமானை அழைத்துச் சென்றனர். ஹனுமானும் அமைதியாக இருந்தார். சற்றும் மனம் தளராமல், புன்னகையோடு ஹனுமான் வீதியில் வலம் வந்தார். அப்போது ஹனுமான் தம்முடைய மனத்தில் பின்வருமாறு எண்ணினார்.


"என்னால் இந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு, இந்த அரக்கர்கள் அனைவரையும் அழித்து விட்டு, உடனடியாக வானத்தில் பறந்து சென்று விட முடியும். ஆயினும், அவ்வாறு செய்வதில் எனக்கு இப்போதைக்கு ஈடுபாடு இல்லை. இரவில் இலங்கையை என்னால் தெளிவாக நோக்க இயலவில்லை. இப்போது வெளிச்சத்தில் இலங்கையை நான் நன்றாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் நெளிவு சுளிவுகளை அறிந்து கொள்ள எனக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக வாய்த்துள்ளது. தன்னுடைய காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பவன், புறத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களால் பாதிக்கப்பட மாட்டான். இந்த அரக்கர்கள் என்னுடைய வாலில் தீ வைத்து, என்னை எவ்வாறு துன்புறுத்தினாலும் என்னுடைய மனம் ஒருபோதும் கலங்காது." என்று மன தைரியத்தோடு இருந்தார்.


ஹனுமான் அவ்வாறு துன்புறுத்தப்படும் சம்பவத்தைக் கண்ட அரக்கிகள், அசோக வனத்தில் இருக்கும் சீதையிடம் விரைந்தோடி சென்று தெரிவித்தனர். இதைக் கேட்ட சீதை மிகவும் மனம் நொந்து போனார். ஹனுமானுக்கு வெப்பத்தைக் கொடுத்து வருத்தாமல், குளிர்ச்சியை அளிக்குமாறு அக்கினி தேவனிடம் சீதை பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். உடனே, ஹனுமானின் வாலில் எரிந்து கொண்டிருந்த அக்கினியின் பிரகாசம் அதிகரித்தது. பிரகாசம் அதிகரித்தப் போதிலும் சுட்டெரிக்கும் தன்மையுடைய அக்கினி, ஹனுமானுக்குச் சற்றும் வெப்பத்தைக் கொடுத்து வருத்தாமல் மாறாகக் குளிர்ச்சியை அளித்தது. ஹனுமானின் தந்தையான வாயுதேவரும் தன்னுடைய இதமான காற்றால், ஹனுமானுக்கு மேலும் குளிர்ச்சியை அளித்தார்.


சுட்டெரிக்கும் தன்மையுடைய நெருப்பு தன்னை சிறிதும் வருத்தவில்லை என்பதை ஹனுமான் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஹனுமான் எண்ணினார். இலங்கையின் நுழைவாயிலை அடைந்த போது, அந்த அரக்கர்களை எல்லாம் அழித்தார். அப்போது ஹனுமானின் வாலில் எரிந்து கொண்டிருந்த அக்கினி, சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஹனுமான் வாலில் சுடர்விட்டு எரியும் தீயைக் கொண்டு இராவணனின் ராஜ்ஜியத்தை தீக்கிரை ஆக்கினார்.


திரிகுடை மலையில் நின்று கொண்டு ஹனுமான் இலங்கை நகரம் தீக்கிரை ஆவதைக் கண்டு கொண்டிருந்தார். அப்போது ஹனுமானின் வால் அவருக்கு அக்கினி மாலையைப் போலவும் அதில் எரிந்து கொண்டிருந்த அக்கினி, அவருக்குப் பின்னால் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனைப் போலவும் காட்சியளித்தது என வால்மீகி கூறுகிறார். அன்று அந்த மகாத்மா உலகையே அழிக்க உதித காலாக்னியைப் போல காட்சியளித்தார் எனவும் வால்மீகி கூறுகிறார்.


“த்ரிகூட ஷ்ருங்காக்ரதலே விசித்ரே ப்ரதிஷ்டிதோ வானர ராஜஸிம்ஹ: ப்ரடீப்த லாங்கூல க்ருதார்சிமாலீ வ்யராஜதாதித்ய இவாம் ஷுமாலீ” (5:54:44)

“காலாக்னிரிதி ஸம்சிந்த்ய ஸர்வபூதானி தத்ரஸு:” (5:54:49)


ஆயினும், அப்போது ஹனுமான் இலங்கையே தீக்கிரை ஆகிவிட்டது, சீதைக்கும் விபரீதமாக எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடும் என எண்ணிச் சிந்தித்தார். இந்தத் தீயில் சீதையும் மாண்டிருக்கக் கூடும் என ஹனுமான் எண்ணி மனம் குழம்பினார். ஒருவேளை சீதை உயிர் பிரிந்தால், ராமனும் அக்கணமே உயிர் நீத்து விடுவார். பின்னர், மதனியையும் தமையனையும் பிரிந்து லக்ஷ்மணரும் உயிர் நீத்து விடுவார் என எண்ணி ஹனுமான் தன்னைத் தானே சாடினார்.


இவ்வாறு தன்னைத் தானே கடிந்து கொண்ட ஹனுமான் சிறிது நேரம் சிந்தித்தார். நெருப்பால் நெருப்பை அழிக்க முடியாது என ஹனுமான் உணர்ந்தார். தன்னுடைய வாலில் கொளுத்தப்பட்ட நெருப்பு தன்னையே சிறிதும் பாதிக்கவில்லை. அதற்கு காரணம் சீதை தாயாரின் தவ வலிமை தான். சீதை இந்த மண்ணில் இருப்பதால், சுட்டெரிக்கும் தீ கூட அறமுடைய நல்லவர்களை ஒருபோதும் பாதிக்காத வண்ணம் செயல்படுகின்றது. அப்படிப்பட்ட நெருப்பு சீதையை என்ன செய்து விட முடியும்? சீதை தன்னுடைய தவ வலிமையாலும், சத்திய வாக்காலும், தம் கணவர் மீது கொண்டிருக்கும் இணைப்பிரியா அன்பாலும் நெருப்பைக் கூட சுட்டுப் பொசுக்கி விடும் வல்லமை கொண்டவர். இவ்வாறு உணர்ந்த ஹனுமான் தன்னைத் தானே மனத்தால் தேற்றிக் கொண்டார்.


ஆயினும், சீதையை மீண்டும் நேரில் கண்டு விட்டப் பின்னர் தான் இலங்கை நகரை விட்டுப் போவதாக ஹனுமான் உறுதிக் கொண்டு அசோக வனத்திற்கு மீண்டும் சென்று சீதையைக் கண்டார்.


சீதை தீயினால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு ஹனுமான் மனம் நிம்மதி அடைந்தார். ஹனுமானின் வீரச் செயல்களை உணர்ந்த சீதை ஹனுமானைப் பாராட்டினார். சீக்கிரமே இராமர் வந்து சீதையை மீட்பார் என சீதைக்கு மனதைரியத்தைக் கொடுத்து விட்டு ஹனுமான் அங்கிருந்து விடைபெற்றார்.


(வால்மீகி இராமாயணம், சுந்தர காண்டம் 53-56 ஆவது அத்தியாயம்)


Thursday, 25 June 2020

திருவாசகம் - Thiruvasagam (with English Translation)



திருவாசகம்
சிவபுராணம் (5)

பொருள்:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான கர்மவினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

விளக்கம்:
இறைவன் காட்டிய அருளினாலன்றி அவனது திருவடியைக் காண முடியாது. ஆதலால், “தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி” என இறைவனருளால் அவன் திருவடியைக் கண்ட இன்பத்தை பாடுகிறார் மாணிக்கவாசகர். இறைவன் ஐம்பெரும் பூதங்களில் கலந்து அவற்றுக்கு அப்பாலும் இருக்கிறான் என்பதை விளக்க “விண்ணிறந்து மண்ணிறைந்து மிக்காய்” என்றார். இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார். இவற்றால் அவையடக்கம் கூறப்பட்டது.

English Transliteration:

Kann nudhalaan than karunai
Kann kaatta vanthu eythi
Ennutharku ettaa
Ezhil aarkazhal irainji
Vinn niraindhum mann niraindhum
Mikkaay vilangu oliyaay
Enn irandhu ellai ilaathaane
Nin perumcheer
Pollaa vinaiyen
Pugazhum'aaru ondru ariyen

English Translation:

I came here (take birth and get the opportunity to sing the praise of Ishvara) because He with an eye on His forehead showed me His mercy,
I stood upon Him saluting the anklet of Him, whose attractiveness beyond the reach of the mind.
Ishvara is filled in the sky and the Earth, He is being the highest and is seen as a glittering light. He is infinite and beyond all limitation of barrier.

I am the one who has done many bad karmas in past births, do not know the ways to praise Your greatness.

Word-by-word meaning:

1) Kann nudhalaan = the one with an eye on His forehead (Lord Shiva)
2) Than karunai = His mercy
3) Kann kaatta = showed
4) Vanthu eythi = I came here
5) Ennutharku ettaa = beyond the reach of the mind
6) Ezhil aarkazhal = anklet (of Him who) attractiveness
7) Irainji = salute/perform namaskaram (vanangi is a synonym)
8) Vinn niraindhum = (He is) filled in the sky
9) Mann niraindhum = (He is) filled in the Earth
10) Mikkaay vilangu oliyaay = (He is) the highest and (is seen as) a glittering light
11) Enn irandhu = Infinite
12) Ellai ilaathaane = beyond limitation
13) Nin perumcheer = Your (Ishvara's) greatness
14) Pollaa vinaiyen = I have done many bad karmas
15) Pugazhum'aaru = ways to praise
16) Ondru ariyen = (I) do not know

திருவாசகம் - Thiruvasagam (with English Translation)



திருவாசகம்
சிவபுராணம் (4)

பொருள்:

வெறுக்காத இன்பத்தை அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். (நெற்றியில் கண்ணுடைய) சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளைத் துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணங்கி, உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

விளக்கம்:

பிற எல்லாப் பொருள்களையும் இறைவனின் திருவருளாலே அறிந்து வரும் உயிர், இறைவனை அறிவதும் அவனருளாலே என்பதை “அவன் அருளாலே அவன் தாள்வணங்கி” எனக் குறிப்பிடுகிறார். இறைவனின் பொருள் சேர் புகழைப் பாடினால், இருள் சேர் இருவினையும் சேரா என்பது மறைமொழி.

””இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"” (குறள் 5)

இறைவனின் புகழை உள்ளம் மகிழ்ந்து பாடினால், சஞ்சித கர்மா மற்றும் ஆகமி கர்மா எனப்படும் இருவினைகளும் நீங்கிவிடும். சஞ்சித கர்மா என்பவை முந்தைய பல பிறவிகளில் செய்த மொத்த வினைகள்; ஆகமி கர்மா என்பவை இப்பிறவியில் செய்துகொண்டிருக்கும் செயல்கள். இவ்வாறு கர்மாக்கள் மெல்ல மெல்ல சாம்பலாக்கப் படுவதால் மீண்டும் பிறவியெடுக்கும் அவசியம் நேராது.
 

Transliteration:
Aaratha inbam arulum malai potrri
Sivan avan en chinthaiyul nindra adhanaal
Avan arulaale avan thaall vanangi
Chinthai magizha Sivapuranam thannai
Munthai vinai muzhudhum
Oaya uraippan yaan

Translation:

Praise to the Ishvara who gives the never fading happiness like a mountain of mercy.
Because that Lord Shiva is stood in my thought,
I salute His feet by the grace of Him,
I shall recite the Sivapuranam to rejoice my mind so that the entire karma which I have earned earlier disappears.

Word-by-word meaning:

1) Aaratha inbam = never fading happiness
2) Arulum = gives/bestows
3) Malai = mountain
4) Potri = praise
5) Sivan = Lord Shiva (Ishvara)
6) Avan = He
7) En chinthaiyul = in my thought, 'chinthai' means thought/mind
8) Nindra = stood, 'nil' means stand
9) Adhanaal = because
10) Avan arulaale = by the grace of Him, 'arul' means grace
11) Avan thaall vanangi = (I) salute His feet, 'thaall' means feet, 'vanangi' means perform Namaskaram
12) Chinthai magizha = to rejoice (my) thought/mind
13) Sivapuranam thannai = the Sivapuram itself (Sivapuranam here refers to the name of this particular song from Thiruvasagam)
14) Munthai vinai = previous karma
15) Muzhudhum = entirely
16) Oaya = to fade/disappear
17) Uraippan yaan = I shall recite



Wednesday, 24 June 2020

இராவணனை எச்சரித்த ஹனுமான் (இராமாயணம்)



இராவணன் சீதையை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொண்டு சென்று அசோக வனத்தில் சிறைப்பிடித்து வைத்திருந்த சமயத்தில். சுக்ரீவரின் பணித்தலுக்கு இணங்கி மஹாபலியான ஹனுமான் இலங்கைக்கு விஜயம் புரிந்திருந்தார். இலங்கையில் அசோக வனத்தில், சீதை பிராட்டியாரை சந்தித்தப் பின், ஹனுமான் இராவணனின் சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஹனுமான் இராவணனுக்கு இராமர்-சீதை புகழையும் வரலாற்றையும் எடுத்து உரைத்து, சீதையை இராமரிடமே ஒப்படைக்குமாறு பணிக்கிறார். அவ்வாறு செய்ய தவறினால், இராவணனின் சாம்ராஜ்யமே சிதைந்து போகும் எனவும் ஹனுமான் அறிவுரை செய்தார். இந்த சம்பவங்கள் வால்மீகி இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

சுந்தர காண்டத்தின், 51-ஆவது அத்தியாயத்தில் ஹனுமான் இராவணனிடம் பேசுகிறார்.

 

"தசரத மன்னரின் மூத்த மைந்தனான இராமன், தம் மனைவி சீதை மற்றும் சகோதரர் லக்ஷ்மணரோடு வனவாசம் புரிந்திருந்தார். சீதை, ஜனக மன்னரின் புதல்வி. தம் தந்தையார் தசரதரின் பணித்தலுக்கு இணங்கி இவர்கள் 14 ஆண்டுகள் தண்டக வனத்தில் வனவாசம் மேற்கொண்டுள்ளனர். ஒருநாள் இராமரும் லக்ஷ்மணரும் வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த போது, சீதையைக் காணவில்லை. இப்போது நான் சீதை பிராட்டியாரை உங்களுடைய அசோக வனத்தில் கண்டேன். சீதை தாயார் உங்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தேன். அறம்பொருள் கற்று தவங்களில் மேன்மை அடைந்த மஹா பண்டிதர் நீங்கள். மாற்றானின் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்து சிறைப்பிடித்து வைத்திருப்பது உங்களுக்குப் பொருத்தமான செயல் அல்ல. தர்மத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது உங்களைப் போன்ற புத்திமான்களுக்கு தகுந்தது அல்ல. இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி உங்களின் மூலத்தையே அழித்து விடக் கூடும். ஆதலால், என் அறிவுரையைக் கேளுங்கள். சீதையை இராமரிடம் ஒப்படைத்து விடுங்கள்." என ஹனுமான் இராவணனுக்கு எடுத்துரைத்தார்.

 

மேலும் ஹனுமான் தொடர்ந்தார்,

 

"நன்மையோ தீமையோ, கர்மாவின் பலன்கள் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவனையும் தொடர்ந்து வரும். உலகத்தில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவரும் நல்ல மற்றும் தீய கர்மாவின் பலன்களை அனுபவித்து தீரவேண்டும் என்பது நியதி. ஒருவன் தான் செய்த நல்ல கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் போது, அவன் செய்த தீய கர்மாவின் பலன்கள் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்படும். காத்துக் கொண்டிருக்கும் தீய கர்மாவின் பலன்கள் எப்போது வேண்டுமானாலும் ஒருவனை வாட்டலாம். எனவே, நல்ல கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் போது, முடிந்தவரை மேலும் நல்ல பலன்களை அளிக்க கூடிய செயல்களில் தான் ஈடுபட வேண்டும். இதனால், வருங்காலத்தில் தீய கர்மாவின் பலன்கள் குறைய வாய்ப்புள்ளது. தீய கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் போதும், மறந்தும் தீய பலன்களைத் தரக்கூடிய செயல்களில் ஈடுபடக் கூடாது. இது மேலும் மேலும் தீய கர்மபலன்களை அளிக்கும்."

 

"நீங்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் சீதை வேறுயாரும் இல்லை. காலராத்திரி எனப்படும் காளி. ஒட்டுமொத்த இலங்கையையும் சொற்பநொடியில் சர்வநாசமாக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர்." (5-51-34)

 

யாம் சீதா இதி அபிஜானாஸி யா இயம் திஷ்ததி தே வஸே

கால ராத்ரீ இதி தாம் வித்தி ஸர்வ லங்கா வினாஷினீம் (5:51:34)

 

"ஆதலால், சீதையை சிறைப்பிடித்து வைத்திருப்பது தங்களுடைய கழுத்தைச் சுற்றி நீங்களே பாசக்கயிறு போட்டிருப்பதற்கு ஒப்பாகும். உங்களின் மித்திரர்கள், மந்திரிகள், உறவினர்கள், சகோதரர்கள், மைந்தர்கள், நலன்விரும்பிகள், மனைவியர்கள் மற்றும் இந்த இலங்கை தேசம் ஆகியவை நாசத்தை அடைய நீங்களே வழியமைத்து விடாதீர்கள். இராம நாமத்தை செபிக்கும் என்னுடைய நாவிலிருந்து வரும் இந்த சத்திய வாக்கை செவிமடுத்துக் கேளுங்கள். நீங்கள் பகைத்துக் கொள்ள நினைப்பது வேறு யாருமில்லை. சர்வ லோகங்களையும் உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து, பின் மீண்டும் அனைத்தையும் அதே நிலைக்கு கொண்டு வரும் வல்லமை படைத்த மஹாவிஷ்ணு. அவரிடம் விரோதம் கொண்டு வாழ்வது கடினம்."

 

என ஹனுமான் கூறினார். இதைக் கேட்டு இராவணன் கடும் கோபத்திற்கு ஆளாகினான். உடனடியாக ஹனுமானை வதம் செய்யுமாறு பணித்தான். ஹனுமானுக்கு மரணத்தண்டனை அளிக்க உத்தரவிடப் பட்டது.

 

அப்போது சபையில் இருந்த விபீஷணர் இராவணனின் செயலை ஆமோதிக்கவில்லை. தூதுவனாக வந்தவரைக் கொலை செய்வது ராஜ தர்மத்திற்கும் உலக நடைமுறைக்கும் எதிரானது. ஆதலால், அவ்வாறு செய்ய வேண்டாம் என விபீஷணர் அறிவுரை செய்தார். ஆயினும், இராவணன் ஹனுமானைக் கொலைத் தண்டனையால் அழித்தே தீரவேண்டும் என கோபம் கொண்டு பேசினான். விபீஷணர் மீண்டும் எடுத்துரைத்தார். ஒற்றனாக வந்தவன் கர்வத்துடன் பேசி சில தொந்தரவுகளைச் செய்துள்ளான் என்பதால், அவனைக் கொலை செய்வதை சாஸ்திரங்கள் ஏற்காது. சாஸ்திரங்களைக் கற்று உணர்ந்த பண்டிதராகிய இராவணன் இதை ஒருபோதும் செய்யக் கூடாது. கோபத்தால் எடுக்கும் முடிவு ஒருபோதும் சரியாக இருக்காது. ஆதலால், கோபத்தை தணித்துக் கொண்டு நீங்கள் கற்றுணர்ந்த உலக நடைமுறை மற்றும் சாஸ்திர விதிமுறைகளுக்குத் தக்கபடி ஒரு முடிவை எடுங்கள் என விபீஷணர் வேண்டுகோள் விடுத்தார்.

 

இதைக் கேட்டு சினம் குறைந்த இராவணன் விபீஷனரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆமோதித்தான். மரணத்தண்டனையைக் காட்டிலும் குறைந்த தண்டனையை வழங்க திட்டமிட்டான். “ஒரு வானரத்திற்கு இஷ்டமான பூஷணம் (விருப்பமான அணிகலன்) அதனுடைய வால் எனக் கூறப்படுகின்றது. ஆதலால், சீக்கிரமே ஹனுமானுடைய வாலில் தீ மூட்டுங்கள். எரிந்த வாலுடன் ஹனுமான் தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி ஓடட்டும். காயமுற்ற உடல் உறுப்புடன் திரும்பி ஓடி வரும் அவனைக் கண்டு அவனுடைய நண்பர்களும் சகோதரர்களும் நகைக்கட்டும்.” என இராவணன் ஆணையிட்டான். (5:53:1-4)

 

ஹனுமான் சாதாரண மனிதனோ வானரமோ கிடையாது. அன்று இராவணன் ஹனுமானுக்கு கொடுத்த தண்டனை, அவனுக்கு அவனே வழங்கிய தண்டனை ஆகியது.

திருவாசகம் - Thiruvasagam (with English Translation)




சிவபுராணம் (3)

பொருள்:

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தையாக நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அடியார்களின் அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. நிலையாமை தன்மையுடைய பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. சிறப்பு பொருந்தி விளங்கும் திருப்பெருந்துறையில் எழுந்தருளும் நம் இறைவனது திருவடி போற்றி.

English Transliteration:

Eesan adipotrri enthai adipottri
Dhesan adipotrri Sivan sevadi potrri
Neyatthe nindra nimalan adi potrri
Maaya pirapparukkum mannan adi potrri
Seeraar perunthurai nam Devan adi potrri

English Translation:

This particular verse praises the feet of Lord Shiva.

Praise to the feet of Eesan (Isha is another name of Ishvara, Shivan).
Praise to the feet of my father.
Praise to the feet of the one who is radiant.
Praise to the red feet of Lord Shiva.
Praise to the feet of one who stood in the love of the devotees and the one who is pure.
Praise to the feet of the one who releases us all from the impermanent cycle of births.
Praise to the feet of the King (of Universe).
Praise to the feet of the one who is divine that resides in the Avudaiyarkoil. (This particular temple is where this song get sung by the great saint Manickavasagar).

Word-by-word meaning:

1) Eesan = another name for Lord Shiva
2) Adi potrri = adi means feet, potrri means praise (this phrase gets repeated)
3) Enthai = my father (en means my, thanthai means father. Hence, 'enthai' refers to my father)
4) Dhesan = one who is radiant. This is a Tamilised word from Sanskrit word 'Tejas' which means brightness.
5) Sivan sevadi = the red feet of Lord Shiva
6) Neyatthe nindra = (he) who stood in the love of the devotees. Neyam means love or affection; neyatthe refers to 'in affection'; meanwhile, nindra refers to 'stood'.
7) Nimalan - the one who is pure.
8) Maaya pirapparukkum = the one who releases (all) from the impermanent cycle of births (samsara)
9) Mannan = king/lord
10) Seeraar perunthurai = is the name of Avudaiyarkoil, a temple located in Pudukkottai district of Tamil Nadu.
11) Nam Devan = Our Lord, Devan refers to one who is divine.