Followers

Sunday 27 March 2016

ஐக்கிய அமெரிக்காவில் 450 கோயில்கள்



ஐக்கிய அமெரிக்காவில் 450-க்கும் அதிகமான இந்து ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 135-க்கும் அதிகமான இந்து ஆலயங்கள் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன.

ஐக்கிய அமெரிக்காவில் 23 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர் என 2014-ஆம் ஆண்டு மக்கள்தொகை அறிக்கை தெரிவிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்கள். அமெரிக்க இந்துக்களில் இரண்டில் ஒருவர் உயர்நிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள். அமெரிக்காவின் மற்ற மதத்தினரை விட இந்துக்களே அதிகம படித்தவர்கள் மற்றும் அதிக வருமானம் பெறுபவர்கள் ஆவர்.

சுவாமி விவேகானந்தரின் விஜயத்தால் 1893-ஆம் ஆண்டு இந்துதர்மம் அமெரிக்காவில் ஒளியேற்றியது. அதன்பிறகு நிறைய வேதாந்த சமூகங்கள் உருவாகின. 1906-ஆம் ஆண்டு துவங்கி நிறைய வேதாந்த சமூக கூடங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு 1957-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில், சிவமுருகன் ஆலயம் எழுப்பப்பட்டது. 1977-ஆம் ஆண்டு நியூயார்க்கில், மகா வல்லப கணபதி ஆலயம் எழுப்பப்பட்டது. 1981-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் சிவவிஷ்ணு ஆலயம் எழுப்பப்பட்டது. மேலும் நிறைய இடங்களில் சுவாமிநாராயணர் ஆலயமும் அமைந்துள்ளன. டெக்ஸாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜேஸ்வரி ராதாராணி ஆலயமும் மிகவும் புகழ்ப்பெற்ற ஓர் ஆலயமாகும்.

மிச்சிகன் நகரில் அமைந்திருக்கும் பராசக்தி ஆலயமும் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆலயம் டாக்டர். கிருஷ்ண குமார் அவர்களால் எழுப்பப்பட்டதாகும். அவர் ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருந்த போது, ஆதிசக்தியின் தரிசனத்தைப் பெற்றார். அதன்பின்னரே இந்த கோயிலை எழுப்பினார். மேலும் அமெரிக்காவின் இண்டியானாவில் அமைந்திருக்கும் பாரதியா ஆலயமும் தனித்த சிறப்புமிக்கதாக விளங்குகின்றது.

No comments:

Post a Comment